12ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே துக்காச்சி சவுந்தர்யநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வரும் நிலையில், இரண்டாம் ராஜகோபுரத்தின் வாயிற்படியில், இந்த கல்வெட்டை கண்டெடுத்தனர்.
அதில், குலோத்துங்க சோழநல்லுார் தென்திருக்காளத்தி மகாதேவர் விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற சொற்றொடர்கள் இருந்தன.
மேலும், விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலம் எனும் துக்காச்சி ஊர் சபையோர், நிலம் தானம் அளித்த செய்தியை கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது என ஆய்வாளர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!