பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது. 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாதம் 20ம் தேதி பதவியேற்ற முதல்வர், துணை முதல்வர், எட்டு அமைச்சர்களுக்கு நேற்று வரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.
துறைகள் ஒதுக்குவது குறித்தும், அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாகவும் புதுடில்லியில் மூன்று நாட்களாக தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.

நேற்று சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை முதல்வர், துணை முதல்வர் தனித் தனியாக சந்தித்து பேசினர். இறுதியாக காலியாக உள்ள 24 அமைச்சர் பதவிகளையும் நிரப்ப, கார்கே பச்சைக்கொடி காட்டினார்.
இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர் சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு பெங்களூரு திரும்பினர். இன்று காலை 11:45 மணிக்கு பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்க உள்ளது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், புதியவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதவியேற்பு முடிந்த பின், இன்று மாலையே துறைகள் ஒதுக்கப்பட உள்ளன.
புதிய அமைச்சர்கள் யார் யார்?
1 .ஹெச்.கே.பாட்டீல்
2. கிருஷ்ணபைரே கவுடா
3 .செலுவராயசாமி
4. வெங்கடேஷ்
5. மஹாதேவப்பா
6. ஈஸ்வர் கன்ரே
7. ராஜண்ணா
8. தினேஷ் குண்டுராவ்
9. சரண பசப்பா தர்ஷனாப்பூர்
10. சிவானந்த பாட்டீல்
11. திம்மாபூர்
12. எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா
13.சிவராஜ் தங்கடகி
14. சரண பிரகாஷ் பாட்டீல்
15. மங்கள் வைத்யா
16. லட்சுமி ஹெப்பால்கர்
17. ரஹீம் கான்
18. டி.சுதாகர்
19. சந்தோஷ் லாட்
20. போசராஜு
21. பைரதி சுரேஷ்
22. மது பங்காரப்பா
23. எம்.சி.சுதாகர்
24. நாகேந்திரா
வாசகர் கருத்து (4)
Super dayஇன்று அஷ்டமி....நன்னா விளங்கிடும்..... அமாவாசை அடுத்த பிரதமை அன்றுதான் சித்தராமையா மற்றும் சிவக்குமார் பதவி ஏற்றனர்..... நாத்திகவாதிகளா இவர்கள்.
அவரவர்களுக்கு அந்தந்த மணிலா அடிப்படையில் ஒரு சிறப்பு உண்டு தமிழ்நாடு தவிர அணைத்து மாநிலங்களிலும் பிரதமை (பட்டிமம்) சிறப்பான நாளாக எடுத்து செயல் படுவார்கள் அதுபோல தான் அஷ்டமியும் .ஆனால் உனக்கு தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநில கலாச்சாரமும் தெரியாது போல ...
ஒருத்தர் மட்டுமே இருக்காரே லிஸ்டில் ...
24 கொள்ளையர்கள் என்று மாற்றி படித்து விட்டேன்....