Load Image
Advertisement

குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Life sentence for woman who brutally killed child    குழந்தையை கொடூரமாக கொன்ற  பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
ADVERTISEMENT
விழுப்புரம்:பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த பெண்ணுக்கு, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விழுப்புரம், சித்தேரிக்கரை செல்வா நகரைச் சேர்ந்தவர் ஷமிலுதீன், 30, இவரது மகள் நசிபா, 3. பிரசவத்தின் போது ஷமிலுதீன் மனைவி இறந்து விட்டதால், குழந்தை நசிபாவை, ஷமிலுதீன் தாய் ஷகிலா வளர்ந்து வந்தார்.

ஷமிலுதீன், 2019ல், அப்சானா, 22, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தை நசிபாவை ஷமிலுதீன் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

குழந்தை நசிபாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தினமும் இன்சுலின் ஊசி போடும்படி டாக்டர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், ஊசி போடாமலும், உரிய மாத்திரைகள் கொடுக்காமலும் அப்சானா, குழந்தையை துன்புறுத்தி வந்தார்.

மேலும் நசிபா, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்து தொல்லை கொடுத்து வந்ததால், அப்சானா கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இதற்கிடையே ஷமிலுதீன், 2021ல், வெளியூர் சென்றிருந்தார். அதிகாலை 3:50 மணிக்கு, துாங்கிக் கொண்டிருந்த நசிபாவை, சமையலறைக்கு துாக்கிச் சென்ற அப்சானா, தலையை சுவற்றில் இடித்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தார்.

பின், சமையலறை சிலாப்பில் இருந்து விழுந்து குழந்தை இறந்து விட்டதாக நாடகம் ஆடினார்.

சந்தேகம் அடைந்த ஷமிலுதீன், விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை அப்சானா கொலை செய்தது தெரிந்தது. அப்சானா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹெர்மேஸ், குழந்தையை கொலை செய்த அப்சானாவிற்கு ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement