Load Image
Advertisement

அதிக வட்டி தருவதாக ரூ.8,438 கோடி மோசடி வி.சி., கவுன்சிலர் உட்பட 10 பேர் கைது

10 people including VC, councilor arrested in Rs 8,438 crore fraud by paying high interest    அதிக வட்டி தருவதாக ரூ.8,438 கோடி மோசடி வி.சி., கவுன்சிலர் உட்பட 10 பேர் கைது
ADVERTISEMENT
சென்னை:'முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, இரு நிதி நிறுவனங்கள், 8,438 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மன்னார்புரத்தை தலைமையகமாக வைத்து, எல்பின் என்ற நிதி நிறுவனம்செயல்பட்டு வந்தது. இதற்கு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, சென்னை மற்றும் புதுச்சேரியிலும் கிளைகள் உள்ளன.

இந்நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், 963 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வி.சி., கட்சியை சேர்ந்த, திருச்சி மாநகராட்சி, 17வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன், 45, மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம், வெள்ளக்கேட்டை சேர்ந்தவர் ஜானகிராமன், 36. இவர், ஐ.எப்.எஸ்., எனும் நிதி நிறுவனத்தில் முக்கிய ஏஜன்டாகசெயல்பட்டு வந்தார். இந்நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 84 ஆயிரம் பேரிடம்,5,900 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

இதில், ஜானகிராமன் மட்டும், 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். கமிஷன் தொகையாக, 25 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

இந்த பணத்தில், மூன்று சொகுசு பங்களாக்கள் கட்டி, சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் இவரை, பல நாட்கள் நோட்டமிட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர்.

ஆருத்ரா எனும் நிதி நிறுவனம், 1 லட்சம் முதலீட்டாளர்களிடம், 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தில், கூடுதல் இயக்குனர்களாக செயல்பட்ட, சென்னை மாலதி, ராணிப்பேட்டை சதீஷ், உதயகுமார், வேலுார் நவீன் என, எட்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மோசடி குறித்து, ஐ.ஜி., ஆசியம்மாள் அளித்த பேட்டி:

ஆருத்ரா, ஐ.எப்.எஸ்., - ஹிஜாவு உள்ளிட்ட, நிதி நிறுவனங்கள், 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளன. இதுவரை, 90 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். ஐ.எப்.எஸ்., மற்றும் ஹிஜாவு மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோசடி நிறுவனங்களிடம் இருந்து, 350 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், 50க்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 'கோவை யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்' எனும் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக, எஸ்.பி.,தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளோம். ஏற்கனவே மூவர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement