ADVERTISEMENT
கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு தனி இடம் உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளில் பல கோடி ரசிகர்களை கொண்டது சி.எஸ்.கே., அணி.
கிரிக்கெட் பெரிதும் பார்க்காத, கிரிக்கெட் பற்றி அறியாத பெண்கள் உட்பட பலர், சி.எஸ்.கே., அணியை கொண்டாடுகின்றனர் என்றால் அதற்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 'தல' தோனி மிக முக்கியகாரணம்.
2008ம் ஆண்டு ஐ.பி.எல்., போட்டி துவங்கப்பட்டது முதல், தற்போது நடந்து வரும் சீசன் வரை, சி.எஸ்.கே., 10 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது என்பது சாதனை.
இந்த சாதனையை கொண்டாடும் வகையிலும், நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், 'ஐ.டி.சி.,யின் சன்பீஸ்ட் சூப்பர்மில்க் பிஸ்கட்' சார்பில், நாளை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேரணி நடக்கவுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், இசை என ஒரு கிலோ மீட்டர் பேரணி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அணிக்கு நேரில் சென்று ஆதரவு அளிக்க முடியாமல் போன ரசிகர்கள், கோவையில் இருந்தே தங்கள் ஆதரவை தெரிவிக்க, ஒரு வாய்ப்பு இந்த பேரணி.
நுாற்றுக்கணக்கான மக்கள், 'மஞ்சள்' உடையில் சி.எஸ்.கே., கோஷத்துடன் பேரணியாக செல்ல உள்ளனர். இதில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் நாளை மாலை, 3 மணியளவில், ரேஸ்கோர்ஸ் சென்று சி.எஸ்.கே., அணிக்காக, 'ஸ்ட்ராங்கா விசில் போடலாம்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!