Load Image
Advertisement

குட்கா கடத்தலின் போது விபத்தில் பீஹார் வாலிபர் பலி

Bihar youth dies in accident during gudka smuggling    குட்கா கடத்தலின் போது விபத்தில் பீஹார் வாலிபர் பலி
ADVERTISEMENT
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, குட்கா பொருட்கள் கடத்திச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், பீஹார் மாநில வாலிபர் இறந்தார்.

பீஹார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர்கள் அசேன் அலி, 19; டிரைவர், இர்ஷாத், 23, மற்றும் ராஜஸ்தானை சேர்ந்தவர் பாபர், 30.

இவர்கள் மூவரும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாருதி காரில் 25 மூட்டைகளில் 250 கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்காவை கடத்தி சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மங்கலம் புது காலனி அருகே, நேற்று அதிகாலை 3. 30 மணிக்கு கார் வந்தது.

அப்போது, டிரைவர் அசேன் அலி துாங்கியதால், சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில், காரின் முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இர்ஷாத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காரில் பயணித்த பாபர், 25 மூட்டை குட்கா மூட்டைகளை அருகே இருந்த ஏரி மற்றும் கரும்புத் தோட்டத்தில் வீசி தலைமறைவானார். காயமடைந்ததால் அசைன் அலியால் தப்ப முடியவில்லை.

எலவனாசூர்கோட்டை போலீசார், அசேன் அலியை கைது செய்து, குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement