ADVERTISEMENT
ஆவடி, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய ராணுவ சாலையில், கடந்த ஓராண்டுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அந்த பணிகள் பாதியில் நிற்கின்றன.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், இச்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத்துறை போலீசாருடன் சென்றனர்.
அப்போது வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி இறுதி வரை அவகாசம் கேட்டனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம் அளித்தது.
ஆனால், மார்ச் மாதம் வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இது குறித்து நம் நாளிதழில் மார்ச் மாதம் செய்தி வெளியானது.
அவகாசம் அளித்து நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதை மறந்து விட்டதால், ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அக்கிரமிப்பானது, ராணுவ சாலையை தொடர்ந்து, ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை, 5 கி.மீ., வரை நீண்டு கொண்டே போகிறது.
இதனால், இவ்விரு சாலைகளில், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை, முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்று வர முடியாத சூழல் உருவாகி உள்ளது. சப்பைக் காரணங்களை கூறி, அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
- இலியாஸ், சமூக ஆர்வலர், ஆவடி,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!