ADVERTISEMENT
ஆவடி, சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஆவடி செக் போஸ்ட், 'எஸ்.பி.டிரேடர்ஸ்' என்ற கடையில் உள்ளவர்களால், மழை நீர் வடிகால் மீது வியாபாரம் சார்ந்த பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரப்பலகைகள் வடிகாலில் விழுந்து, அடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
கடந்தாண்டு, இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் மழை நீர் வடிகால் மீது பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இசக்கி அம்மாள், ஆவடி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!