மாம்பழம் வைப்புத்திறன் அதிகரிக்கும் ஹசானா
மாம்பழம் மற்றும் வாழைப் பழங்களின் வைப்புத்திறனை அதிகரிக்க, 'ஹசானா' என்கிற கரைசலை, வேளாண் பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம் பற்றி, வேளாண் பல்கலை பேராசிரியர் ஹரிப்பிரியா பேசியதாவது:
மண் வளத்தை பாதுகாக்க, பயிர் உற்பத்தியை பெருக்க, 'நானோ' தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை சார்பில், 10 விதமான இடுபொருட்கள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களின் வைப்புத்திறனை அதிகரிக்க, 'ஹசானா' கரைசல் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 21 நாட்கள் வரை மாம்பழங்கள் வைப்புத்திறன் அதிகரிக்கிறது; வாழைப்பழங்கள், 25 நாட்கள் வரை வைப்புத்திறன் அதிகரிக்கும். மாத்திரை மற்றும் ஸ்டிக்கர் வடிவிலும் கிடைக்கிறது.
நானோ யூரியாவை, 'டிரோன்' மூலமாக, 5 நிமிடத்தில் விளைநிலங்களில் தெளிக்கலாம். அடுத்த கட்டமாக, நெல் மற்றும் மக்காச்சோளத்துக்கும் நானோ யூரியா பயன்படுத்த பரிந்துரைத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!