தலைவலிக்கு ஆவி பிடித்த மாணவி பலி
துாத்துக்குடி:ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த நர்சிங் மாணவி, மூச்சு திணறலால் வெந்நீரில் கவிழ்ந்து இறந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் அருகே மேலசேர்ந்தபூமங்கலத்தைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவரது இரண்டாவது மகள் கவுசல்யா, 18; நர்சிங் மாணவி.
இவருக்கு ஜலதோஷம், தலைவலி இருந்தது. நேற்று காலை வீட்டில் வெந்நீரில் ஜலதோஷத்திற்கான மருந்தை போட்டு ஆவி பிடித்தார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வெந்நீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்தார்.
ஆவி பிடித்துக் கொண்டிருந்த மகள் அசைவற்று இருப்பதை பார்த்த தாய், மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அவர் ஏற்கனவே இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். ஆத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!