மாநகராட்சி அனுமதியின்றி பார்பர் ஷாப் இயங்க தடை
கோவை:மாநகராட்சி பகுதிகளில் முடிதிருத்தும் நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் 'மசாஜ் பார்லர்' உள்ளிட்டவை உரிய அனுமதியின்றி கடந்த பிப்., முதல் செயல்படக்கூடாது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
காவல் துறை, மாநகராட்சி நகர் நல அலுவலரின் தடையின்மை சான்றும் பெற வேண்டும். இச்சான்றிதழ்கள் இல்லையேல் விண்ணப்பிக்க இயலாது.
சாதாரண முடிதிருத்தும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 200 ரூபாய் மற்றும் அதே நிறுவனங்கள் 'ஏசி' வசதியிருப்பின், 1000 ரூபாயும் என, நிறுவனத்துக்கான உரிமத்தொகைநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தும் நிறுவனங்கள், 500 சதுரடி வரை, 5,000 ரூபாய், 501 முதல் 1,000 சதுரடி வரை, 10 ஆயிரம் ரூபாய், 1,000 சதுரடிக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஆண்டு உரிமைத்தொகையைகட்டணமாக, மாநகராட்சியில் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!