Load Image
Advertisement

மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் ரூ.35 கோடியில் மறுசீரமைப்பு

Renovation of schools attached to the Municipal Corporation at a cost of Rs.35 crores    மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் ரூ.35 கோடியில் மறுசீரமைப்பு
ADVERTISEMENT


சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளி கல்வித்துறையின்கீழ் 790 பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, கவுன்சிலர்கள், மக்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகள், மாநகராட்சி கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளின் கட்டமைப்புகளை, மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார்.

அதன்படி, கொட்டிவாக்கம், பெருங்குடி, நாராயணபுரம், ஜல்லடியான்பேட்டை, மயிலை பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளை மேயர் பார்வையிட்டார்.

அப்போது, அப்பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் மேயர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் ஷரண்யா அறி, அமித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, சுற்றுச்சுவர், சமையல் அறை, வகுப்பறை கட்டடம் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். முதற்கட்டமாக 35 கோடி ரூபாய் மதிப்பில், மிகவும் சேதமடைந்துள்ள பள்ளி வகுப்பறைகள் இடித்து, புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

- மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி.


வாசகர் கருத்து (1)

  • என்னதான் நடக்கும்? - marathahalli, bangalore,இந்தியா

    இந்தம்மா தானே ஒரு நடுநிலை பள்ளியை இடித்து போட்டு விட்டு சமுதாய கூடம் கட்டுவோம் என்று சுற்றறிக்கை வெளியிட்டது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement