Load Image
Advertisement

105 லிட்டர் சாராயம் கண்டுபிடித்து அழிப்பு

Discovery and destruction of 105 liters of liquor    105 லிட்டர் சாராயம் கண்டுபிடித்து அழிப்பு
ADVERTISEMENT
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே எரி சாராயம் குடித்து, எட்டு பேர் உயிரிழந்த நிலையில், எரி சாராய விற்பனையில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் ஐந்து பேர், செய்யூர் மற்றும் சூணாம்பேடு காவல் எல்லைக்கு உட்பட்டவர்கள் என்பதால், புதிதாக பதவி ஏற்றுள்ள செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரனீத் உத்தரவின்படி, மதுராந்தகம் டி.எஸ்.பி., - பொறுப்பு, பரத் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலியார்குப்பம், தழுதாளிகுப்பம், நயினார்குப்பம், ஓதியூர் உள்ளிட்டகிராமங்களில், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில், 35 லிட்டர் அளவு கொண்ட மூன்று கேன்களில், 105 லிட்டர் நாட்டு சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதை கைப்பற்றிய போலீசார், கீழே ஊற்றி அழித்தனர். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement