Load Image
Advertisement

டயர் வெடித்து பஸ் மீது மோதிய கார் தம்பதி பலி: குழந்தைகள் தப்பினர்

Couple dies as car crashes into bus with burst tyre, children escape    டயர் வெடித்து பஸ் மீது மோதிய கார் தம்பதி பலி: குழந்தைகள் தப்பினர்
ADVERTISEMENT
திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் அருகே, கார் டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், முகையூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ், 46; ராணுவ வீரர். இவரது மனைவி பிரிட்டோ மேரி, 40. இவர்களது மகள்கள் செரின், 10, ரிங்சின், 9, பிரிட்டோ மேரியின் தங்கை புனிதா, 29.

இவர்கள் ஐவரும், 'ஸ்கார்பியோ' காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்று விட்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சகாயராஜ் ஓட்டினார்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே, நேற்று மதியம் 1:00 மணிக்கு வந்த போது, திடீரென காரின் வலது பக்க முன் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியனில் மோதியது.

எதிர் திசையில், சென்னையிலிருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. காரின் முன் பகுதி, அப்பளம் போல நொறுங்கியதில், சகாயராஜ், பிரிட்டோ மேரி சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் பயணித்த மூவர் மற்றும் பஸ் டிரைவர் விஜயகுமார், 48, லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு, விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement