Load Image
Advertisement

சுவையுடன் கொஞ்சம் ஆரோக்கியமும் இருக்கட்டுமே!

Lets have some health along with the taste!    சுவையுடன் கொஞ்சம் ஆரோக்கியமும் இருக்கட்டுமே!
ADVERTISEMENT
சாக்லேட், கேக், கிரீம் போன்ற உணவுகளை குழந்தைகளிடம் இருந்து, இனி பிரிப்பது என்பது இயலாத ஒன்று.

தற்போது, சுவையை கூட்டுவதற்கு கெமிக்கல் கலப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் தாய்மார்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தீர்வாக, சிறுதானியங்களில் கெமிக்கல் கலப்பு இல்லாமல் தயாரிக்கும் உணவு பொருட்கள் சிறந்த மாற்றாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானிய மாநாட்டின் ஒரு பகுதியாக, கண்காட்சி நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். ஐஸ்கிரீம், சாக்லேட் பிரவுனி, பிஸ்கட், குக்கீஸ் என வரிசை கட்டி உணவு பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

இதில் பங்கேற்ற, கோவையை சேர்ந்த தொழில்முனைவோர் இளைஞர்பிரவீன் கூறுகையில், '' சிறுதானியங்களில் எவ்வித கெமிக்கலும் இன்றி, ஐஸ்கிரீம் தயாரிக்கின்றோம். தவிர, பிரவுனி, குக்கீஸ், போன்றவற்றையும் இன்றைய கால கட்ட குழந்தைகள் விரும்பும் வகையில் தயாரித்து வருகிறோம். சுவையுடன் ஆரோக்கியமும் இருக்கவேண்டும் என, சிறுதானியங்களில் பேக்கரி பொருட்கள் மட்டுமின்றி, பொங்கல் மிக்ஸ், அடை மிக்ஸ் போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றோம்,'' என்றார்.

கண்காட்சியில், வாழைப்பழம் பிஸ்கட், வாழையில் அத்தி, சிறுதானிய முறுக்கு, வாழைப்பழ சாறு, எண்ணெய் வகைகள், என விவசாயிகளின் மதிப்பு கூட்டு பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement