Load Image
Advertisement

உங்க வீட்டு கல்யாணத்துக்கு... ரிக் ஷா வேணுமா... ஜாகுவார் வேணுமா!

For your home wedding... do you want a Rickshaw... do you want a Jaguar!    உங்க வீட்டு கல்யாணத்துக்கு... ரிக்   ஷா வேணுமா... ஜாகுவார் வேணுமா!
ADVERTISEMENT
வாழ்க்கையில் ஒரு தடவைதான் கல்யாணம் பண்ணுகிறோம். அதையும் நினைவில் நிற்பது போல் பண்ணி விடுவோம்!

- இதுதான் இன்று இளசுகள் மத்தியில், கல்யாணத்துக்கான பார்முலா. இப்படி நினைவில் நிற்க, சமீபகாலமாக கோவையில் அறிமுகமாகியுள்ள புதிய டிரெண்ட், விதம் விதமான வாகனங்களில் கல்யாண ஊர்வலம் செல்வது!

இதற்காகவே, ரிக் ஷா பி.எம்.டபிள்யூ, ஆடி, பென்ஸ், ஜாகுவார் உள்ளிட்ட வாகனங்களை, 2-4 மணி நேரத்திற்கு வாடகைக்கு விடும் கிருஷ்ணகுமார் என்பவர் கூறுகையில், ''எங்களிடம் பழங்கால 'ஹெரிட்டேஜ்' வகைகளை அதிகம் கேட்டு வருகின்றனர். குறிப்பாக ஜாகுவார், மினிகூப்பர், உயர்தர பென்ஸ் கார்களுக்கு டிமாண்ட் அதிகம்.

சினிமா சூட்டிங், அரசியல் தலைவர்களுக்கும் வாடகைக்கு விடுகிறோம். நேரம், தொலைவு, அலங்காரம் பொறுத்து விலை மாறும். வண்டிக்கு ஓட்டுநர் தந்து விடுவோம்,'' என்றார்.

இன்றைய இளைஞர்கள் இப்படியெல்லாம் திருமணம் செய்வது, கெத்து காட்டவும், 'லைக்ஸ்' அள்ளவும்தான்; வேறெதற்கு!


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement