கோவில் வளாகத்தில் கழிப்பறை ஹிந்து முன்னணியினர் கண்டனம்
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் வளாகத்தில், ஆகாச லிங்கம் சன்னிதி அருகே, மூன்று பொதுக்கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
கோவில் வளாகத்தில், பொதுக்கழிப்பறை என்பது புனிதத்தை கெடுக்கும் செயல் எனக் கூறி, ஹிந்து முன்னணி மாநில செயலர் மனோகரன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை கோவில் வளாகத்திற்குள், 'நமச்சிவாயா' கோஷத்துடன் வந்தனர்.
தியாகாஜர் சன்னிதி முன்னர் கூடியவர்கள், தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டி, முறையிட்டனர்.
பின், கோவிலின் முகப்பில் நின்று, கழிப்பறையை அகற்றக்கோரி, கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கழிப்பறையை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!