வழிப்பறி நாடகமாடிய ஜெர்மன் நபருக்கு குட்டு
வளசரவாக்கம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரெட்ரிச் வின்சென்ட், 23. இவர், மாணவர் விசா மூலம் சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தார். சென்னை, வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் நடந்துவந்தபோது, கத்திமுனையில் மர்ம நபர்கள் வழிமறித்து, இரண்டு பைகளை பறித்து சென்றதாகவும், அதில் 'லேப்டாப்' உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும், வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், அதுபோன்ற ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், பைகளை தவறவிட்ட அவர், போலீசார் பைகளை தேடித்தர நடவடிக்கை எடுக்க வழிப்பறி நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து, பிரெட்ரிச் வின்சென்ட்டை அழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!