மனைவியை வெட்டிய அன்பு கணவருக்கு வலை
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, வ.உ.சி.நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் வளர்மதி, 48. அதே பகுதியில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் 'ஹவுஸ் கீப்பிங்' வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் முத்து, 48; சென்னை மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்.
வேறு பெண்ணுடன் பழகிய முத்து, மனைவி வளர்மதி மற்றும் மகன் சாமுவேல், 24, ஆகியோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினமும் வளர்மதியை அடித்து, கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த மகனையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
காயமடைந்த வளர்மதி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின்படி விசாரித்த புளியந்தோப்பு போலீசார், தலைமறைவான முத்துவை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!