அனுமதியில்லாத 58 விசைப்படகுகள் பறிமுதல்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 58 விசைப்படகுகள், முறையாக பதிவு செய்யாமல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளின் நிலை குறித்து ஒவ்வோர் ஆண்டும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர்.
ஒவ்வோரு ஆண்டும் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நாட்களில், இந்த ஆய்வு நடக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில், 1,470 விசைப்படகுகள் உள்ளன. இதில், 1,379 விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் 58 விசைப் படகுகள் பதிவு செய்யாமல் கடலுக்கு சென்று வருவது தெரிய வந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கிஉள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!