Load Image
Advertisement

இனி ஆட்டோவிலும் வருவார்கள் ரோந்து!

Now they will come to patrol by auto!    இனி ஆட்டோவிலும் வருவார்கள் ரோந்து!
ADVERTISEMENT
கோவை மாநகர போலீசார் ரோந்து செல்வதற்கு வசதியாக, பேட்டரியில் இயங்கும் 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாநகர போலீசார் தற்போது ஜீப், கார், பைக் ஆகியவற்றிலும், நடந்தும் ரோந்துப்பணி மேற்கொள்கின்றனர். இப்போது கூடுதலாக இரண்டு பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ போன்ற தோற்றத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. பொதுமக்களை எச்சரிப்பதற்கு ஒலிபெருக்கியும், சிகப்பு, நீல வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

போலீசாரின் பல்வேறு பிரிவுகளின் தொடர்பு எண்களும், ஆட்டோக்களின் நான்கு புறமும் எழுதப்பட்டுள்ளன. இன்னொரு ஆட்டோ, பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வடிவத்தில் உள்ளது.

'நாட்டிலேயே முதல் முறையாக, போலீஸ் ரோந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும், பேட்டரி வாகனம் இவைதான். இந்த பேட்டரி ஆட்டோக்கள் நாளை முதல்(இன்று), ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement