கள்ளச்சந்தையில் மது விற்றோர் கைது
மாதவரம், மாதவரத்தில், அனுமதியற்ற பார்கள் மூடப்பட்டதால், அங்குள்ள அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் தெருவில், கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக, மாதவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் போலீசார், நேற்று காலை, அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கங்காதரன், 45, பழனி, 59, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 95 குவார்ட்டர் மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!