Load Image
Advertisement

சஞ்சய்குமாரை கவர்ந்த பஞ்சு மிட்டாய் குழந்தைகள்!

Sanjaykumar is attracted by cotton candy children!    சஞ்சய்குமாரை கவர்ந்த பஞ்சு மிட்டாய் குழந்தைகள்!
ADVERTISEMENT
சாலை ஓரங்களில் பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டு வரும் வியாபாரிகளை பார்த்தாலே, குழந்தைகள் அடம்பிடிக்க தொடங்கிவிடும்.

கோவை மாநகரில் வ.உ.சி., பூங்கா, ரயில் நிலையம், காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட், ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், பெரியகுளம் என பயணிகள், குழந்தைகள் அதிகம் பேர் வரும் இடங்களில், பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் வலம் வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான உ.பி., மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குமார், 30, கடந்த 14 ஆண்டுகளாக கோவையில் பஞ்சு மிட்டாய் விற்கிறார்.

அவருடன் சேர்த்து மொத்தம் 20 பேர், இங்கு வெவ்வேறு இடங்களில் பஞ்சு மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

அவர் கூறுகையில், ''பஞ்சு மிட்டாய் நாங்களே தயார் செய்து விடுவோம். இதை விற்பனை செய்வதன் மூலம் நாளொன்றுக்கு, 500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. பஞ்சு மிட்டாய்களை வாங்கித் தின்னும் சின்னஞ்சிறு குழந்தைகளின் மகிழ்ச்சியை காணும்போது, பரம திருப்தியாக இருக்கிறது. இதை விட்டு, வேறு வேலைக்கு போக வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று எனக்கு எண்ணமே இல்லை,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement