பழனிசாமி மீதான புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல்
சேலம்:வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது தொடுக்கப்பட்ட வழக்கில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி, சஞ்சய் காந்தி முதல் தெருவைச் சேர்ந்தவர் மிலானி. இவர், 'ஆன்லைன்' மூலம், சேலம் ஜே.எம்., 1 நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பியிருந்தார்.
அதில், 'முன்னாள் முதல்வர் பழனிசாமி, 2021ல் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த சொத்து விபர பிரமாண பத்திரத்தில் பொய் தகவல் அளித்துள்ளார். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
இதுகுறித்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மே, 26ல் அறிக்கை தாக்கல் செய்ய, மாஜிஸ்திரேட் கலைவாணி, ஏப்., 26ல் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பழனிசாமியின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர்.
அறிக்கையை, இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நிலவரம், அதுதொடர்பாக சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்கள் இதில் அடங்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!