ADVERTISEMENT
சென்னை, சென்னை, புனித தோமையார்மலை மோட்டார் வாகன பிரிவில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல், 48. இவர், கடந்த 2021ம் ஆண்டு, தான் உயர் பதவியில் உள்ளதாகக் கூறி, பெண் ஒருவரிடம் அறிமுகமாகி உள்ளார்.
நாளடைவில் இது காதலாக மாறி, தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அப்பெண் வலியுறுத்தி உள்ளார். ஆனால், ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மறுத்துள்ளார். இதனால், கடந்தாண்டு ஜன, 27ல், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். இதன்படி போலீசார் விசாரித்த நிலையில், ஆண்ரூஸ் கால்டுவெல் முன்ஜாமின் பெற்றதால், அப்போது கைது செய்யப்படவில்லை.
தலைமையிடத்தில் தெரிவிக்காமல் முன்ஜாமின் பெற்றதை அறிந்த போலீஸ் உயரதிகாரி, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டதால், கடந்தாண்டு ஜூனில், அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் பின், ஆண்ட்ரூஸ் கால்டுவெல் துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மோட்டார் வாகன பிரிவு துணை கமிஷனர் கோபால், நிரந்தரமாக ஆண்ட்ரூஸ் கால்டுவெலை பணி நீக்கம் செய்து, கடந்த 16ம் தேதி உத்தரவிட்டார். இதன்படி, நேற்று நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!