ADVERTISEMENT
புதுக்கோட்டை:பொற்பனைக்கோட்டை பகுதியில் தமிழக அரசின் சார்பில் நடக்கும் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியில், செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், சங்ககால பொருட்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது.
திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பில், அகழ்வாராய்ச்சி நடந்தது. அப்போது, அரிய வகை நவரத்தின கற்கள், பானை ஓடுகள், சங்க காலத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி பணியை, அமைச்சர்கள் சமீபத்தில் துவக்கினர். பழங்கால கட்டடங்கள் மண்ணில் புதையுண்டுள்ளதற்கான அடையாளமாக, செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செங்கல் கட்டுமானம், எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்த ஆய்வு தற்போது நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!