டீ.சி., வாங்கிய மாணவர்கள் எங்கு சேர்ந்துள்ளனர்? கண்காணிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
பொள்ளாச்சி;பள்ளிகளில் டீ.சி., பெற்று செல்லும் மாணவர்கள், படிப்பை தொடர்வதை உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின், பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரித்து கொண்டே போகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கே, 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
எட்டாம் வகுப்பு வரை, 50 சதவீத வருகைப்பதிவு கூட, இல்லாத மாணவர்களும், அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அடுத்த கல்வியாண்டிலாவது, இடைநிற்றல் குறைக்க வேண்டுமென்பதற்காக, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தீவிரமாக நடக்கிறது.
இதோடு, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பு முடித்து, டீ.சி., பெறும் மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனரா என்பதை, கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இடைப்பட்ட வகுப்புகளில் டீ.சி., பெறும் மாணவர்கள், தனியார் பள்ளியை நோக்கி செல்வதாக இருந்தால், அதற்கான காரணத்தை கேட்டறிந்து, இணையதளத்தில் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பு முடித்து, வேறு பள்ளிகளில் சேரும் மாணவர்கள், எங்கு சேர்ந்துள்ளனர் என்பதை, எமிஸ் இணையதளத்தில் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விபரங்களும் பிரத்யேகமாக குறிப்பிடப்படுகிறது. வேறு பள்ளிகளிலோ அல்லது தொழிற்கல்வியோ தொடராத மாணவர்களின் பட்டியலை திரட்டி, ஜூலை இறுதிக்குள், படிப்பு தொடர வழிவகை செய்யப்படும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!