பெண்ணின் உடலுறுப்பு தானம்
சென்னை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 54 வயது பெண் மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானமளிக்க, உறவினர்கள் முன்வந்தனர். அதைத் தொடர்ந்து கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் தானமாக பெறப்பட்டன.
பெறப்பட்ட உடல் உறுப்புகள், காவேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த நான்கு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், இயல்பான வாழ்க்கையை இனி வாழ முடியும் என, சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!