எம்.சி.இ.டி.,க்கு நிதி ஒப்புதல்
பொள்ளாச்சி:மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், 'சிப்ஸ் டூ ஸ்டார்ட் அப்' திட்டத்தின் வாயிலாக, சுகாதார உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்த, ஒரு கோடியே, 39 லட்சத்து, 89 ஆயிரம் நிதியை, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆராய்ச்சியானது எம்பெடேட் சிஸ்டம் வடிவமைப்பு உற்பத்தியில், முன்னணி வகிக்கும் தொழில்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளராக, கல்லுாரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையினர் பேராசிரியர் விஜயகுமார் உள்ளார்.
'சி2எஸ்' திட்டம் லெவல் டிசைன் நுட்பத்தை புகுத்துவதன் வாயிலாக. திருப்பு முனையை ஏற்படுத்தும் என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கல்லுாரியின் தலைவர் மாணிக்கம், தாளாளர் ஹரிஹரசுதன், செயலர் ராமசாமி, முதல்வர் கோவிந்தசாமி பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!