ADVERTISEMENT
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நீச்சல் பழகச் சென்ற இரண்டு குழந்தைகள் தந்தை சக்திவேலின் கண் எதிரே நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
ராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டி அருகே பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். டிரைவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் ஒரு கையை இழந்து தற்போது வாட்ச்மேனாக உள்ளார். மனைவி மதன பிரியா மில் தொழிலாளி. இவர்களுக்கு கோகுல்கிருஷ்ணன் 8, வர்ஷனா ஸ்ரீ 6, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை ஊரில் பொங்கல் விழா நடந்து வரும் நிலையில் சக்திவேல் இரண்டு குழந்தைகளையும் லாரி ட்யூப் பயன்படுத்தி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்று கொடுத்துள்ளார்.எதிர்பாராவிதமாக இரு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கினர். இவர்களை ஒரு கை இழந்த சக்தி வேலால் காப்பாற்ற முடியவில்லை, அருகில் உள்ளவர்கள் உதவிக்கு வருவதற்குள் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கீழ ராஜகுல ராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!