அலங்கார பொருட்கள் ஷோரூம் துவக்கியது ஏஷியன் பெயின்ட்ஸ்
சென்னை, நாட்டின் முன்னணி பெயின்ட் நிறுவனமான,'ஏஷியன் பெயின்ட்ஸ்', திரைச்சீலை, படுக்கை விரிப்பு, வால் பேப்பர், ஆடம்பர 'பர்னிச்சர்' என, வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனையிலும், தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உள்ளது.
தற்போது சென்னையில், ஆறு மாடியில், 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 'பியூட்டிபுல் ஹோம் ஸ்டூடியோ' என்ற பெயரில், வீட்டு அலங்கார பொருட்களுக்கென பிரத்யேக சில்லறை விற்பனை ஷோரூமை துவக்கியுள்ளது.
இங்கு, வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில், அனைத்து வகையான வீட்டு அலங்காரப் பொருட்களும், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக 'டிசைன்'களும் இங்கு கிடைக்கும்.
ஐரோப்பிய நாட்டு மரங்கள், தோலில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர பர்னிச்சர்களும் கிடைக்கும்.
இந்த புதிய ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்கும் என, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் சிங்கிள் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!