ADVERTISEMENT
தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே சாலையில், அகர்வால் மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில், திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவல் கிடைத்து போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து, நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தினர். அந்த பகுதியில் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி துறையினர் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். தார் சாலை போட்டு நீண்ட காலம் ஆனதால், மண் இளகி அங்கு பள்ளம் விழுந்தது தெரிந்தது. இதையடுத்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம், பள்ளத்தை மூடினர்.
முழுமையாக சீரமைக்கும் வரை அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என, போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!