Load Image
Advertisement

நீர் மருது மரத்தில் சிறுத்தையின் நகக்கீறல்! கணக்கெடுப்பின் போது பதிவு

A leopards scratch on a water marutu tree! Registration during survey    நீர் மருது மரத்தில் சிறுத்தையின் நகக்கீறல்! கணக்கெடுப்பின் போது பதிவு
ADVERTISEMENT
உடுமலை;ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், கணக்கெடுப்பு பணியின் போது, சிறுத்தையின் நகக்கீறல் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில், குளிர் கால புலிகள் மற்றும் தாவர, ஊன் உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள், கடந்த, 22ல் துவங்கி, வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.

நேற்று, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், கொழுமம் வனச்சரக அலுவலர் மகேஷ் மற்றும் வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொழுமம் வனச்சரகம், பாப்பம்பட்டி பிரிவு, பெரியம்மாபட்டி சுற்றில், நாகவலசு ஓடை, குதிரையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கோம்பைத்துறை சரகப்பகுதிகளில், புலிகள் கணக்கெடுப்பின் போது, புலி, சிறுத்தை, பிற ஊன் உண்ணி மற்றும் பெரிய தாவர உண்ணிகள் தடயம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கோம்பைத்துறை சரகப்பகுதியில், நீர் ஓடைக்கு அருகில், உயர்ந்து வளர்ந்து காணப்பட்ட நீர் மருது மரத்தில், சிறுத்தையின் நகக்கீறல் களும், அப்பகுதியில் மண் தரையில் சிறுத்தை கால்களால் பிரண்டிய மற்றும் நடந்து சென்ற அடையாளங்கள் காணப்பட்டது.

இந்த அடையாளங்கள், புலி மற்றும் சிறுத்தைகள் உணவுக்காக வேட்டையாடப்படும், இரை விலங்குகளின் மாமிச எச்சங்கள் தங்களது நகங்களில் படிந்திருப்பதை சுத்தம் செய்வதற்காகவும், தனது ஆளுமைக்குட்பட்ட எல்லையினை பிற மாமிச உண்ணிகளுக்கு தெரியப்படுத்தும்.

இவ்வாறு, மரங்களிலும், தரைப்பகுதிகளில் அடையாளங்களை பதிவு செய்து, எல்லைகளை வகுத்து கொள்வதும், அவற்றின் இயல்பு, என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement