Load Image
Advertisement

பதநீர் குடித்த 100 நாள் திட்ட பணியாளர்கள் வாந்தி, மயக்கம்

The 100-day project workers who drank Pataneer vomited and fainted    பதநீர்  குடித்த  100  நாள்  திட்ட பணியாளர்கள் வாந்தி, மயக்கம்
ADVERTISEMENT
திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரிந்தபோது பதநீர் குடித்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இவர்களில் மோசமான நிலையிலிருந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் பாறைப்பட்டி ஏ.பி.நகர், சின்னப்பள்ளப்பட்டி, பெரியபள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போலீசார் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் புல் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

காலை 11:00 மணிக்கு பதநீர் விற்கும் வியாபாரி டூவீலரில் வந்தார். அவரிடம் 100 நாள் திட்ட பணியாளர்களில் பெண்கள் சிலர் பதநீர் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு சிலர் வீடுகளுக்கு சென்றனர். மோசமான நிலையிலிருந்த ஏ.பி.நகரை சேர்ந்த சரஸ்வதி 55, நித்யா 30, மாரியம்மாள் 50, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

கலப்பட உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்வதால் அதை வாங்கி உண்போருக்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்தான் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement