மெரினா கடற்கரையில் கட்டுப்பாடு ஆதாரம் அளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை, 'சென்னை, மெரினா கடற்கரைக்கு வரும் மக்களிடம், நேர கட்டுப்பாட்டை காரணம் காட்டி, போலீசார் துன்புறுத்துகின்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது' என, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை, திருமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனு:
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க, மெரினா கடற்கரைக்கு மக்கள் வருகின்றனர். இரவு, 10:00 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது என, அவர்களை போலீசார் அப்புறப்படுத்துகின்றனர்.
கடற்கரைக்கு வருவோரை, இரவு, 10:00 மணிக்கு மேலும் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்தக் கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தவும் கோரியுள்ள மனுவை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'மெரினா கடற்கரைக்கு வருவோரை, போலீசார் துன்புறுத்துவதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின், விசாரணையை, ஜூனுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!