டாஸ்மாக் மதுபான லாரி கான்ட்ராக்டர் வீட்டில் ரெய்டு
ஈரோடு:ஈரோடில், 'டாஸ்மாக்' மதுபான லாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு திண்டல், சக்தி நகர், மூன்றாவது வீதியில் வசிப்பவர் சச்சிதானந்தம், 65; சொந்தமாக லாரிகள் வைத்து, குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒப்பந்தம் பெற்று, சரக்குகளை ஏற்றி அனுப்பும் தொழில் செய்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்.
ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று, மண்டல, மாவட்ட அளவிலான டாஸ்மாக் குடோன்களுக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லவும், லாரி ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
மாநில அளவில் இவர், 300க்கும் மேற்பட்ட லாரிகள், வேன்களில் சப்ளை செய்கிறார். சமீபத்தில், 150க்கும் மேற்பட்ட வேன்களை, சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய, 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஈரோடில் சச்சிதானந்தம் வீட்டிலும், செங்கோடம்பாளையத்தில் உள்ள அவரது கே.எஸ்.எம்., டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருச்சி மற்றும் கேரளாவில் இருந்து வந்த, 10 பேர் கொண்ட குழுவினர், காலை, 8:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!