Load Image
Advertisement

வீணாகும் குடிநீர் திட்ட கட்டமைப்புகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

 Emphasis on utilization of wasted drinking water scheme structures    வீணாகும் குடிநீர் திட்ட கட்டமைப்புகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
ADVERTISEMENT
உடுமலை;உடுமலை, அமராவதி ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட, உறிஞ்சு கிணறுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், அமராவதி ஆற்றின் வழியோரத்தில், கல்லாபுரம், எலையமுத்துார், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், கண்ணாடிபுத்துார் அருகே, ஆற்றில் உறிஞ்சு கிணறுகள் அமைத்து, மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

அதே போல், காரத்தொழுவு பகுதியில் அமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும், வழியோரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும், பல்வேறு குடிநீர் திட்டங்கள் அமராவதி ஆற்றை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில், இக்கிராமங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்ட உறிஞ்சு கிணறுகள் மற்றும் நீர் உந்து நிலையங்கள் பயன்படுத்தப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் வீணாகி வருகிறது.

தற்போது, புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முழுமையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படாமல், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது.

எனவே, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட, குடிநீர் திட்ட உறிஞ்சு கிணறுகளை பயன்படுத்தி, பொது குடிநீர் உபயோகத்திற்கு பயன்படுத்தும் வகையில், புதுப்பிக்க வேண்டும்.

அவற்றை, அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாகவோ, ஒருங்கிணைந்து, குடிநீர் திட்ட கட்டமைப்புகளை ஒப்படைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement