ADVERTISEMENT
செம்மஞ்சேரி,ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பில் இருந்து செம்மஞ்சேரி வழியாக, நுாக்கம்பாளையம் செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் உடையது.
இதில், சாலை மைய பகுதியில், 1,968 அடி நீளம், 40 அடி அகலத்தில், மூடு கால்வாய் கட்டப்படுகிறது. சேலையூர் முதல் பெரும்பாக்கம் வரை உள்ள, 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், பகிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில், இந்த மூடு கால்வாய் கட்டமைக்கப்படுகிறது.
நீர்வளத்துறை சார்பில் நடக்கும் இப்பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. பணி முடிந்த இடத்தில், சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கால்வாய் கட்டமைப்பு போக, 10 அடி கூடுதலாக சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, கால்வாய் மட்டத்தில் 'கான்கிரீட்' போடும் பணி நடக்கிறது.
சாலை மைய தடுப்பு, தெரு விளக்கும் அமைக்கப்படுகிறது. சாலைக்கான கட்டமைப்பு போக, இரு திசைகளில் பாதசாரிகள் நடக்கும் வகையில், அணுகு சாலை அமைக்கப்பட உள்ளது.
மொத்த பணியும், இரண்டு மாதங்களில் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!