Load Image
Advertisement

அக்டோபருக்குள் 20 லட்சம் மரக்கன்று நடணும்! பசுமை கமிட்டி கூட்டத்தில் இலக்கு நிர்ணயம்

- நமது நிருபர் -

கோவை மாவட்டத்தில், வரும் அக்., மாதத்துக்குள், 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் பொது இடங்களில் மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்தவும், பொது நிலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும், மாவட்ட அளவில் பசுமை கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இக்கமிட்டி கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பசுமை குழு உறுப்பினர் சையத் முன்னிலை வகித்தனர்.

அதில், 2023-24ம் ஆண்டில், கோவை மாவட்டத்தில், 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆக., மாதத்துக்குள், 6 லட்சம் மரக்கன்றுகள்; செப்., மாதத்துக்குள், 14 லட்சம்; அக்., மாதத்துக்குள், 20 லட்சம் மரக்கன்றுகளும் நட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு அரசு துறை சார்பில், எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டன என விளக்கம் கோரப்பட்டது. அப்போது, நடப்பட்ட மரக்கன்றுகளில் எத்தனை நன்கு வளர்ந்திருக்கின்றன என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தப்பட்டது.

வனத்துறை சார்பில், 17 நர்சரிகள் மூலமாக, 10 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளது; இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்ய, கலெக்டர் அறிவுறுத்தினார்.

வெட்டக்கூடாது!



பசுமை கமிட்டி உறுப்பினர் சையத் பேசுகையில், ''பொள்ளாச்சி ரோட்டை அகலப்படுத்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், 2,200 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.

அதற்கு மாற்றாக, 22 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் இருந்து இதுவரை மரக்கன்றுகள் நடப்படவில்லை. அதனால், மரங்களை வெட்டாமல், சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

அப்போது, கலெக்டர் கூறுகையில், ''எந்தெந்த துறையில் இருந்து எத்தனை மரக்கன்றுகள் நட வேண்டியிருக்கிறது என்கிற பட்டியலை, அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.

மரங்களை வெட்டுவதற்கு முன், வனத்துறையினர் மதிப்பீடு செய்யும்போது, கள ஆய்வு செய்ய, பசுமை கமிட்டி உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

சில தருணங்களில், மதிப்பீடு தவறாக பதிவிடப்பட்டு, வெட்டி வீழ்த்தப்படுகின்றன,'' என கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement