Load Image
Advertisement

ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை!

சென்னை:''முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, 2006ம் ஆண்டில் இருந்து இன்று வரை, 1 சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:

என் சகோதரர், நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. என் வீட்டில் சோதனை நடக்கவில்லை; அப்படியே நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

எத்தனை இடங்களில் சோதனை நடந்தாலும், கேட்கும் ஆவணங்களை வழங்க தயாராக உள்ளோம். சோதனையை எதிர்கொள்ள, என் உறவினர்கள், நண்பர்கள் தயாராக உள்ளனர்.

சோதனை முடிந்ததும் முழு விபரங்களையும் தெரிவிக்கிறேன்.

என் தம்பி, வீட்டில் இல்லை; மற்றவர்கள் வீட்டில் இருந்தனர். அவர்கள் துாங்கி கொண்டிருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் சோதனைக்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள், கதவை தட்டி, பத்து நிமிடங்கள் காத்திருந்து இருக்கலாம்.

வீட்டில் இருப்பவர்கள் கதவை திறக்கும் முன்பாகவே, அதிகாரிகள், 'கேட்'டில் ஏரி குதித்து உள்ளே சென்றுள்ளனர்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்தபோது, சாப்பாடு வாங்கி கொடுத்து, சோதனைக்கு இடையூறு ஏற்படுத்த கூட்டத்தை கூட்டினர்; அதுபோன்று, தற்போது நடக்கவில்லை. நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரே போனில் அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறினேன்.

கரூரில், 1996ல் முதல் முறையாக சுயேச்சையாக போட்டியிட்டு, ஒன்றியக் குழு உறுப்பினராக வெற்றி பெற்றேன். அன்று முதல் சட்டசபை தேர்தல்களில், 26 ஆண்டுகளாக போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறேன். அமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன்.

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில், மாற்று கருத்து இல்லை.

கடந்த, 2006 சட்டசபை தேர்தல் தான் என் முதல் தேர்தல். அந்த தேர்தல் வேட்புமனுவில் என்ன சொத்து விபரம் தாக்கல் செய்தேனோ, அது தான் இப்போதும் உள்ளது. இன்று வரை ஒரு சதுர அடி நிலம் கூட, நானோ, என் சகோதரனோ, குடும்ப உறுப்பினர்களோ வாங்கவில்லை.

என் தம்பி மனைவியின் தாய், தன் மகள்களுக்கு தன் சொத்துக்களை தானமாக கொடுத்த இடத்தில், வீடு கட்டுப்படுவதை குற்றச்சாட்டாக கூறுகின்றனர்.

எங்களுக்கு இருக்கிற சொத்துக்களும், மக்கள் கொடுக்கும் அங்கீகாரமே போதுமானது. நான் நினைத்து பார்க்க முடியாத பதவியை, எனக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்; அதுவே போதும்.

கரூரில் என்னை எதிர்த்து போட்டியிட்டவர், அங்கு 8,000 சதுர அடியில் வீடு கட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement