Load Image
Advertisement

சிறப்பு குழு பரிந்துரைபடி பென்ஷன்! நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை

உடுமலை;உடுமலை இ.பி.எப்., பென்ஷன்தாரர்கள் நலச்சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுளளனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வாயிலாக, 1995ம் ஆண்டில் இருந்து, தொழிலாளர்கள் பென்ஷன் பெற்று வருகின்றனர். மில் தொழிலாளர்கள், சிமென்ட், காகித ஆலை மற்றும் பி.எப்., பிடித்தம் செய்யும், தனியார் நிறுவனங்களில், பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, 2014ம் ஆண்டு வரை, மாதத்துக்கு, 800 ரூபாய் வரை பெற்று வந்தனர்.

நீண்ட போராட்டத்துக்கு பின், 2014ல், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தும், பல்வேறு நிபந்தனைகளால், சுமார், 75 லட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் பயன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பென்ஷன் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற, எம்.பி.,க்களை உள்ளடக்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டது.

அக்குழுவினர், மாதம், 3 ஆயிரம் ரூபாய் வழங்க பரிந்துரை வழங்கினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கேரளாவில், இ.பி.எப்., பென்ஷன் பெறுபவர்களுக்கு, சமூக பாதுகாப்பு நலத்திட்ட நிதியிலிருந்து கூடுதலாக மாதம் ரூ.1,600 வழங்கப்படுகிறது. இதே போல், தமிழக அரசும், சமூக பாதுகாப்பு நிதி அல்லது வேறு தொழிலாளர்கள் நலன் சார்ந்த திட்டத்தில் இருந்து ரூ.1,600 வழங்க வேண்டும்.

இதனால், மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல், தவிக்கும், பல லட்சம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement