அவதுாறு போஸ்டர் ஒட்டியவர் கைது
எம்.கே.பி., நகர், வியாசர்பாடி, புதுநகரைச் சேர்ந்த, 38 வயது பெண், இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார்.
நேற்று மாலை, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே, இவருக்கும், அதே வங்கியில் பணிபுரியும் வசூலிப்பு முகவரான ராஜேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக, போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், எம்.கே.பி., நகர் போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், 27, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கவுதமுக்கு மற்றொரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருப்பதாக, இப்பெண் பலரிடம் கூறி வந்துள்ளார்.
இதற்கு பழி வாங்கவே போஸ்டர் அடித்து ஒட்டியதாக, கவுதம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, கவுதமை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!