Load Image
Advertisement

தனுஷ்கோடிக்கு கை துண்டித்த இளைஞர் உள்ளிட்ட 3 இலங்கை அகதிகள் வருகை

3 Sri Lankan refugees, including a youth with an amputated hand, arrived at Dhanushkodi    தனுஷ்கோடிக்கு கை துண்டித்த இளைஞர்  உள்ளிட்ட 3 இலங்கை அகதிகள் வருகை
ADVERTISEMENT
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே கடற்கரைக்கு கை துண்டிக்கப்பட்ட கடல்புலி இளைஞர் உள்ளிட்ட 3 இலங்கை அகதிகள் வந்தனர்.

இலங்கை யாழ்ப்பாணம் விஜயன் 46, மனைவி ரஜினி 45, மகள் தபேந்தினி 18, ஆகியோர் மன்னாரில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரையில் வந்திறங்கினர்.

இவர்களிடம் படகு கூலியாக ரூ.1.50 லட்சம் (இந்திய ரூபாயில் 37,500) பெற்றுக் கொண்ட இலங்கை படகோட்டிகள் இந்திய, இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தண்ணி காட்டி விட்டு பத்திரமாக இறக்கி விட்டு மீண்டும் இலங்கை சென்றனர். அகதிகளிடம் மரைன், மத்திய, மாநில உளவு போலீசார் விசாரணை நடத்தி மண்டபம் முகாமில் தங்க வைத்தனர்.

அகதியாக வந்துள்ள விஜயன் 1997--98ல் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடல் புலிகள் அமைப்பு வீரராக பணிபுரிந்துள்ளார். 2009 போருக்கு பின் ஓராண்டு முள்வேலி சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானார். அதன் பின், 2019ல் கடலில் மீன்பிடித்த போது மிதந்து வந்த மர்ம பொருளை எடுத்த போது வெடித்ததில் இவரது வலது கை துண்டானது. இருப்பினும் இவரிடம் மேலும் உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement