குடிமங்கலம் ஜமாபந்தி 172 மனுக்கள் ஒப்படைப்பு
உடுமலை;உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த, குடிமங்கலம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில், 172 மனுக்களை மக்கள் ஒப்படைத்தனர்.
உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த, 23ம் தேதி முதல், திருப்பூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் தலைமையில் நடக்கிறது. நேற்று, குடிமங்கலம் உள்வட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
இதில், பொதுமக்களிடமிருந்து, 172 மனுக்கள் பெறப்பட்டு, 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
வரும், 30ம் தேதி, பெதப்பம்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட, மூங்கில்தொழுவு, வாகத் தொழுவு, வீதம்பட்டி, கொங்கல் நகரம், சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி, புதுப்பாளையம், இலுப்பநகரம், பண்ணைக்கிணறு ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
உடுமலை தாலுகாவுக்கான, நடப்பாண்டு ஜமாபந்தி, வரும் 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!