Load Image
Advertisement

60 ஆண்டுகளுக்கு பின் கம்போடிய மன்னர் இந்தியா வருகை

Cambodian King visits India after 60 years   60 ஆண்டுகளுக்கு பின்  கம்போடிய மன்னர் இந்தியா வருகை
ADVERTISEMENT
நம்பென்: 60 ஆண்டு இடைவெளிக்கு பின் முதன் முறையாக கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தர உள்ளார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செயலர் தெரிவித்துள்ளதாவது, இந்திய - கம்போடியே இடையே கடந்த 1952-ம் ஆண்டு பரஸ்பரம் தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பின் , கடந்த 1963-ம் ஆண்டு கம்போடிய மன்னராக இருந்த நெரோதம் ஷிகானோவுக் அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்தார்.
Latest Tamil News
இந்நிலையில் மூன்று நாள் அரசு பயணமாக கம்போடிய மன்னர் நொரோடம் ஷிகோமானி, வரும் மே.29ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்தியா வருகை தர உள்ளார். இது அவரது முதல் இந்திய பயணம் ஆகும். அவருடன் 27 பேர் உயர்மட்ட குழுவினரும் வருகை தர உள்ளனர். இந்த வருகையின் போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை கம்போடிய மன்னர் சந்தித்து பேச உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.


வாசகர் கருத்து (4)

  • ஆக .. - Chennai ,இந்தியா

    உலகிலேயே பெரிய கோவில் கம்போடியாவில் இருக்கிறது .. தகுந்த பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோவிலை மீண்டும் சீரமைப்பது பற்றி பேச வேண்டும்

  • அப்புசாமி -

    செங்கோல்.குடுத்து வரவேற்கலாம். ராணுவதளவாடங்கள் விற்கலாம். இல்லேன்னா அவருக்கு இங்கே என்ன வேலை?

  • raja - Cotonou,பெனின்

    இது அநியாயம்...ராஜராஜன் பரம்பரையில் வந்த எண்கள் கோமாளி மன்னன் 23 ஆம் புலிகேசியையும் அவனின் மகனான 24 ஆம் புலிகேசி யையும் பார்க்காமல் எதிரிகளை பார்த்தால் உடன் பிறப்பு படைகளை கொண்டு கம்போடியா மீது போர் தொடிப்போம் என்று மாடல் பேரரசு தெரிவித்து கொள்கிறது....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    வருக வருக. இரு நாடுகளின் ஒற்றுமை வளர்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்