Load Image
Advertisement

சிவன் கோவில்களில் கோளறு பதிகம் பாடி சிவ வாத்தியம் முழங்க இனிப்பு வழங்க வேண்டும்:இந்து தமிழர் கட்சி

Hindu Tamil Party should sing Kolஅru Pathikam in Shiva temples and give sweets to Shiva Vatyaam.   சிவன் கோவில்களில் கோளறு பதிகம் பாடி சிவ வாத்தியம் முழங்க இனிப்பு வழங்க வேண்டும்:இந்து தமிழர் கட்சி
ADVERTISEMENT
மயிலாடுதுறை:டில்லியில் வரும் 28ஆம் தேதி செங்கோல் நிறுவப்படும் நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் கோளறு பதிகம் பாடி சிவ வாத்தியம் முழங்க இனிப்பு வழங்க வேண்டும் என மயிலாடுதுறையில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்தார்.


இந்து தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் ராமரவிக்குமார் மயிலாடுதுறையில் நிருபர்களிடம் கூறியதாவது:டில்லியில் 28ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய பாராளுமன்ற கட்டடத்தில் பாரதநாடு சுநத்திரம் பெற்ற சமயத்தில் தமிழ்சமூதாயத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சுவாமிகளால் செய்யப்பட்ட சைவநெறி செங்கோல் கோலோருபதிகம் பாடி அரசாள்வர் ஆணை நமதே என்ற பதிகமுற்றத்தோடு திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, ஓதுவாமூர்த்திகள் மாணிக்கப்பிள்ளை ஆகியோருடன் சடைசாமி என்கின்ற தம்பிரான் சுவாமிகள் பாரதம் சுதந்திரம்பெற்றபோது நேருவிடம் செங்கோலை கொடுத்தார்கள். அந்த செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் வைப்பதை இந்து தமிழர் கட்சி வரவேற்கிறது.

தமிழுக்கும் சைவத்திற்கும் கவுரவப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆதீனகர்த்தர்களை மத்திய அரசு அழைத்து கவுரவித்துள்ளதை வரவேற்கிறோம். இச்சமயத்தில் இந்தவிழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சில அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றனர். அது அவர்கள் உரிமை இருப்பினும் அவர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டமென்று வேண்டுகோள் விடுகிறோம். ஒருவிதமான அடையாளங்கள் நம்முடைய சமுதாயத்தினுடைய இந்த அடையாளங்களை ஒருசிலர் மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் அதற்கு கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம். 1970ம் ஆண்டிற்கு பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் இது குறித்து பேசி இருக்கிறார். அதனால்தான் மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தது என்று பொய்யான ஆவணங்களை நிறுவுவதற்கும், உண்மை வரலாறுகளை திருத்த முயற்சிக்கிறார்கள். காஞ்சி சங்கரமடத்தால்தான் இந்த வரலாறு வெளியில் தெரிந்தது என்பது எல்லாம் பொய்யானது. பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற பிளவுவாத அரசியலுக்கு இங்கே இடம் தந்துவிடக்கூடாது.

அதற்கு கண்டனம் தெரிவித்துகொள்கிறோம். அரசுக்கு தவறான ஆவணங்களை கொடுத்தது யார்? டாக்டர் சுப்ரமணியம் என்பவர்தான் இதுகுறித்து தெரிவித்தார் என்று கூறுகின்றனர். செங்கோலுக்கும், சங்கரமடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு வெளியிட்டுள்ள திறப்பு விழா பத்திரிக்கையில் முதல்பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும். போற்றுதலுக்கு உரிய திருவாவடுதுறை ஆதீனத்தின் அப்போதைய குருமகா சன்னிதானம் படத்தை போட்டிருக்கலாம். ஆனால் பத்திரிக்கை முகப்பில் சங்கராச்சாரியார் படத்தை ஏன் போட்டார்கள்.

மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சரியான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் தரப்பில் இப்படி ஒருசம்பவம் நடக்கவில்லை என்று ஜெயராம்ரமேஷ் தெரிவித்துள்ளார். அப்படியானால் செங்கோலை நேருபெற்றுக்கொண்டாரா இல்லையா? சைவபெருமக்கள், ஆதீனகர்த்தர்கள் கொடுத்த செங்கோல் இல்லை என்று மறுப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். பிரதமர் கவனத்திற்கு இந்த விஷயங்களை கொண்டுசென்றது யார். செங்கோல் விஷயம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சைவமக்களுக்கும், தமிழர்களுக்கும் பெருமை.

இந்த பெருமை வரலாற்றை மடைமாற்றம் செய்து தங்களுடைய செயலாள்தான் என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டடோம். டில்லிக்கு சென்றிருக்கக்கூடிய ஆதீன பெருமக்கள் அனைவரும் இந்த கருத்தை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன கர்த்தர்களும், தங்களது மடத்தின் பக்தர்கள், சிவனடியார்கள், சிவத்தொண்டு செய்பவர்கள் மூலம் வரும் 28ம் தேதி செங்கோல் நிறுவக்கூடிய அதே நேரத்தில தமிழகத்தில் உள்ள சிவன்கோயில்களில் கோளறுபதிகம்பாடி சிவவாத்தியம் முழங்க இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

பிரிவுவாத அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். பாராளுமன்ற கட்டடம் பிரதமரால் திறப்பது பெருமை. ஜனாதிபதியை புறக்கணித்துவிட்டார்கள் என்று கூறுபவர்கள் திரவுபதிமுர்மு பதவியேற்றபோது எதிர்ப்புதெரிவித்தவர்கள் தற்போது நீலிகண்ணீர் வடிக்கின்றனர் என்றார். இந்து புரட்சி முன்னணி மாவட்ட தலைவர் ஜோதிகுமரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement