இந்நிலையில் இன்று புதிய பாராளுமன்றம் குறித்த பிரத்யோக வீடியோ, புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. உள்பகுதி லோக்சபா கட்டடம் தேசியப் பறவையான மயிலையும், ராஜ்யபசபா கட்டடம் தேசிய மலரான தாமரையையும் கருப்பொருளாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி பிரமிக்க வைத்துள்ளது.







புதிய பராளுமன்ற கட்டட லோக்சபாவில் 888 பேரும், ராஜ்யசபாவில் 384 பேரும் என இரு அவைகளிலும் மொத்தம் 1,272 பேர் அமரலாம். லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள செங்கோல் வைக்கப்பட உள்ளது.
மோடி டுவிட்
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது, புதிய பார்லிமென்ட் கட்டிடம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும். இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (3)
காங்கிரஸ் திட்டத்திற்கு ஸ்டாம்ப் ஒட்டி கொள்ளுவது ஒரே நோக்கம் போல
மிக உன்னதமான கட்டிடம். இது தேசத்தின் நன்மைக்காக மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்திடும் உன்னத இடத்தை அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவுக்கு தீயசக்திகள் இல்லாமல் தேசத்தின் மீதான அக்கறையுள்ள பெரியோர்கள் சூழ இக்கட்டிடம் இனிதே திறப்பு விழா காண்பது மட்டற்ற மகிழ்ச்சியே. நல்லது நடக்கும்போது தீயசக்திகள் தானே பயந்து ஓடிவிடும் என்பார்கள். கட்டிடத்தின் ராசியானது ஆரம்பத்திலேயே தீயசக்திகளை ஓரம் காட்டுகின்றது. மோடிஜிக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நல்ல சகுனம் இந்த தீயசக்திகள் ஓடோடி ஒழிந்து போகின்றன. அடுத்தமுறையும் மோடிஜியே பிரதமர் என்பது இந்த புனித பாராளுமன்ற கட்டிடத்தின் ராசிமட்டுமல்ல..அது காலத்தின் கட்டாயம்..
தமிழ் நாட்டின் சோழர் கால செங்கோல் இன்று நமது பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களால் பெருமை அடைகிறது. வாழ்த்துக்கள் மோடிஜி. இந்த புனிதமான நேரத்தில் திமுக போன்ற பெரிய கட்சிகள் இதை தவிர்ப்பது அவர்களே எதிர்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும். ஆனால் அப்போது சரிசெய்ய முடியாத பேரிழப்பாக அது முடியும். அதுவே அந்த கட்சிக்கு முற்றுப்புள்ளியாக அழிவை கொடுக்கும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அதுவே தமிழகத்தின் மகிழ்ச்சி. வந்தே மாதரம் ஜெஹிந்த் பாரத் மாதா கி ஜெய