சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிகாலை 3 மணிக்கெல்லாம் திடீரென உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தியுள்ளனர் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் இன்று (மே 26) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருவது தொடர்பாக திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் ஒரு கவரில் 5 இரண்டாயிரம் நோட்டுகளை வைத்து தாமரை சின்னத்தில் ஓட்டளிக்குமாறு கொடுத்தனர். ரூ.2000 தாள்கள் பல நாட்களாக புழக்கத்தில் இல்லாதபோது, கர்நாடகாவில் பா.ஜ.,வினரிடம் மட்டும் எப்படி வந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரதமர் மோடி கர்நாடகாவில் பிரசாரம் செய்தும் தோற்றனர். கர்நாடக தோல்வியை பா.ஜ., மறைக்க பார்க்கிறது.
'மேன் ஆப் தி மேட்ச்' - ஸ்டாலின்
வருமான வரி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் 'மேன் ஆப் தி மேட்ச்' ஆக ஸ்டாலின் தான் இருப்பார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் பல முதலீடுகளை ஈர்த்து நல்ல பெயரை எடுத்து வருகிறார்.
அதனை மழுங்கடிக்கும் விதமாக, திசை திருப்பும் விதமாக முதல்வர் ஊரில் இல்லாத போது, பா.ஜ., அரசு இன்று ரெய்டுகளை நடத்தியுள்ளது. எமர்ஜென்சி காலத்திலேயே பல ரெய்டுகளை சந்தித்த கட்சி திமுக. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.
டார்கெட்
செந்தில் பாலாஜி, திமுக.,வின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர், பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
அதன் வெளிப்பாடாக இன்று திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. செந்தில் பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டமிட்டு டார்கெட் செய்கிறார்; சதி செய்கிறார்.
திடீரென அதிகாலை 3 மணிக்கெல்லாம் சிலர் வீடுகளில் நுழையும்போது பதற்றத்தில் யார் என கேட்டு, அதனால் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். திட்டமிட்டு சட்டம் ஒழுங்கை குலைக்க என்ற நோக்கில் செயல்படுகின்றனர்.
போலீசாருக்கு தகவல் சொல்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. எத்தனை ரெய்டுகள் வேண்டுமானாலும் நடத்தட்டும், கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (39)
லாடு லாபக்கு தாஸ் கேட்ட கிறார் பதில் சொல்லுங்கள்
கரூர் SP அவர்களின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஒரு அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் பணியை செய்ய விடாமல் தடுத்த கூட்டத்தினரை கைது செய்யாமல் செந்தில் பாலாஜி அவர்களுக்கு வெண் சாமரம் வீசுகிறார். அவமானமாக இருக்கிறது.
ரைடு நடத்த ராகுகாலம், எமகண்டம், குளிகைகாலம் எல்லாம் பார்த்து வருவார்களா? இல்லை லெட்டர் போட்டு, e-mail போட்டு, வாட்ஸ் ஆப்பில் தெரிவித்து விட்டு வருவார்களா? அப்படி செய்தால் ஒன்று வீட்டை பூட்டிக்கொண்டு வெளிநாடு ஓடிவிடுவார்கள், அல்லது எங்காவது ஒளிந்துகொள்வீர்கள்.
சொல்லி விட்டு வரணும் என்று இவர்கள் சொல்லு வதற்கு காரணம் இருக்கிறது. முந்தைய காங்கரஸ் அஆட்சியில் ப சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போனது சொறி டி வி முதலாளிகள் வீட்டில் சொல்லி விட்டு வந்ததால் மாறன் என்ற களவாணி றைக்கு க்கு வந்த போனது முன்பக்கம் மெஆசைய்ய நாற்காலி போர்த்து உட்கார்ந்து கொண்டு உன்கலிய்ய எதிர் பார்த்து தான் காத்திருந்தேனான் வாங்க ஸ்வீட் காரணத்தோடு டீயா பருகி போகலாம் என்று ஊடகங்களு க்கு பேட்டி கொடுத்தார். இபோது நடக்கும் அரசு உஊழலுக்கு நிஜமாகவேஆ எதிர் நடவடிக்கையை எடுக்கும் arsu. அதனிடம் இவர்கள் செய்யும் களவாணி தனங்களுக்கு உடந்தையாகா எப்படி இருக்க முடியும்?
ஸ்டாலினை விமரிசித்து கருத்து தெரிவித்தால் இரவு பன்னிரண்டு மணிக்கு தமிழக போலீசார் கைது செய்கிறார்களே? அதெல்லாம் இந்த காமாலைக்கண்ணனுக்கு தெரியவில்லையா?