Load Image
Advertisement

சிறுமிக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை: நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

Prohibited experiment on girl: Request to order judicial inquiry    சிறுமிக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை: நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
ADVERTISEMENT
நடராஜர் கோவில் தீட்சிதர் சிறுமிக்கு தடை செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தீட்சிதர்களின் வழக்குறிர் சந்திரசேகர் கூறியதாவது; தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினரிடம் தீட்சிதர்கள் தரப்பில் நடந்த விபரங்களை தெரிவித்தேன். சிறார் திருமணம் விவகார விசாரணையில், காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர்.

தீட்சிதர் வீட்டிற்குள் அனுமதியின்றி, சாதாரண உடையில் கடலுார் மாவட்ட டெல்டா தனிப்படை போலீசார் சென்று, விசாரணைக்காக சிறுமி மற்றும் தந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமிகளை கட்டாயப்படுத்தி அறிக்கை பெற்றுள்ளனர். தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையை நீதிமன்ற அனுமதி பெறாமல் சிறுமிகளுக்கு மேற்கொண்டது விதி மீறல்.

தடை செய்யப்பட்ட சோதனை நடைபெற்றதா, இல்லையா என்பது பற்றிதான் விசாரணை. இரு விரல் சோதனை நடைபெறவில்லை என, காவல் துறை தலைவர் மறுத்ததால் அது உண்மையாகாது. நீதிமன்றம் விசாரித்ததால் தான் உண்மை தெரியும்.

தற்போது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளார். இரு சிறுமிகளிடம் நேரடியாக பேசி பதிவு செய்துள்ளார். சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அவர்களின் வாக்குமூலத்தில் தெரிகிறது. இதில் சிறார் உரிமைகள் மீறப்பட்டுள்ளது.

கவர்னர் புகார் தெரிவித்ததையடுத்து, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு நடராஜர் கோவில் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான உள்நோக்கத்துடன், காவல்துறை மூலம் இதுபோன்ற விசாரணை நடந்துள்ளது. எனவே, மத்திய புலனாய்வுத் துறை மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களையும், சிறார் உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கு நீதி உத்தரவிட வேண்டும். தடை செய்யப்பட்ட இரு விரல் மருத்துவ பரிசோதனை சம்பந்தமாக உண்மை வெளிப்பட வேண்டும் எனில், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு அவர், தெரிவித்தார்.

டுவிட்டர் பதிவு



நடராஜர் கோயில் விவகாரம் குறித்து, தமிழக கவர்னர் குற்றச்சாட்டுகள் உண்மை என, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவு

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கன்னித் தன்மை பரிசோதனையான தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ரவியின் குற்றச்சாட்டு உண்மை.

சிதம்பரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக உண்மைக்கு மாறாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. விசாரணை தொடர்பான அறிக்கையை அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement