மே 29ல் நிதி உங்கள் அருகில் குறைதீர் முகாம்
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் 'நிதி உங்கள் அருகில்' குறைதீர் முகாம் நடக்கிறது.
மே 29ல் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்., டிரஸ்ட் சந்தாதாரர்கள் ஆகியோர் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTt ல் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மண்டல கமிஷனர் அமிய காந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலுார் பை பாஸ் சாலையில் உள்ள சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல் சாணார்பட்டி யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள எஸ்.என்.மகால், பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்துார் வடக்கூர் நாடார் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி செஞ்சையில் சி.எம்.சி., ரோட்டில் உள்ள ஸ்ரீ கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் உள்ள சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய இடங்களில் மே 29 காலை 9:00 மணி முதல் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!